வவுனியாவில் 33ஆவது விளையாட்டு விழாவுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

வவுனியா கலைமகள் விளையாட்டுக்கழகமும் கலைமகள் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்தும் 33ஆவது வருட சித்திரை புத்தாண்டு விளையாட்டுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எதிர்வரும் 14ஆம் திகதி சித்திரை வருடப்பிறப்பன்று விளையாட்டுவிழா நடைபெறவுள்ளது.

இவ் விளையாட்டுப்போட்டியில் 10 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலhருக்குமான 50 மீற்றர் மற்றும் 100 மீற்றர் ஓட்டம், 45 கிலோ மீற்றர் ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டம், திருமணமாகாத பெண்களுக்கான முட்டி உடைத்தல், ஆண்களுக்கான முட்டி உடைத்தல், 5 வயதுக்குட்பட்ட இருபாலாருக்குமான மூன்று சில்லு சைக்கிள் ஓட்டம் (சைக்கிளுடன் சமூகமளிக்க வேண்டும்), இடம்பெறவுள்ளன.

மேலும் அணிக்கு 4 பேர் கொண்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தடை தாண்டல் ஓட்டம், திருமணமான பெண்களுக்கான சங்கீத கதிரை, 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான விநோத உடை, 15 வயதுக்குட்பட்ட பெண்பிள்ளைகளுக்கான நிதான ஓட்டம் போன்ற போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் கரப்பந்தாட்ட போட்டியில் பங்குபெற்ற விரும்பும் போட்டியாளர்கள் கலைமகள் விளையாட்டுக்கழக நிர்வாகத்திடம் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து எதிர்வரும் 4ஆம் திகதிக்கு முன்பாக நேரடியாகவோ அல்லது தலைவர், செயலாளர், கலைமகள் விளையாட்டுக்கழகமும் கலைமகள் சனசமூக நிலையமும் மன்னார் வீதி வவுனியா என்ற முகவரிக்கு தபால் மூலமாவோ கிடைக்க ஆவன செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை போட்டிகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0777363175 (பாபு), 0776031512 (ஜீவன்), 0776313658 (கே. விஜயகுமார்), 0776120854 ( ஜெயராஜா) என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு பெறமுடியும் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

You might also like