கிளிநொச்சி பரந்தன் ஏ35 வீதியின் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலி

கிளிநொச்சி பரந்தன் ஏ35 வீதியின் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலி

முல்லைத்தீவு பரந்தன் ஏ35 வீதியின் உடையார் கட்டு சந்திப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உழவனூர் பகுதியினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உடையார் கட்டுப்பகுதியில் இறச்சி வியாபாரத்திற்காக சென்று கொண்டிருந்த வேளை தனியார் பேருந்து ஒன்றில் மோதி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தின் போது உழவனூர், புன்னை நீராவியடி பகுதியினை சேர்ந்த 41 வயதுடைய இ.தவரூபன் என்ற மூன்று பெண்பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தினை தொடர்ந்து விபத்து ஏற்பட்ட இடத்திற்கு சென்ற புதுக்குடியிருப்பு வீதிப்போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

இந்த விபத்தினை தொடர்ந்து தனியார் பேருந்தின் சாரதி புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளை அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might also like