கிழக்கில் இஸ்லாமிய அரசை உருவாக்க திட்டம்! இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸின் கேந்திரமாகலாம்? பேராசிரியர் ரொஹான் குணரட்ன

கிழக்கில் இஸ்லாமிய அரசை உருவாக்க திட்டம்! இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸின் கேந்திரமாகலாம்? பேராசிரியர் ரொஹான் குணரட்ன

கிழக்கில் இஸ்லாமிய அரசை உருவாக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், கல்வியினூடாக வழி நடத்தப்படும் தீவிரவாதிகள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸின் கேந்திரமாக மேலெழும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான நிபுணரும், சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியருமான ரொஹான் குணரட்ன இந்த விடயத்தை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

கேள்வி – தமிழீழ விடுதலைப் புலிகளை நாடு தோற்கடித்திருந்தது. இதேவேளை பிராந்தியத்தில் ஏனைய முஸ்லிம் நாடுகளை விட்டு விட்டு இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஊடுருவ முடியுமென எதிர்பார்த்திருக்கவில்லை. எனவே தெற்காசியாவில் இலங்கையை களமாக உருவாக்கும் திட்டத்தை ஐ.எஸ்.ஐ.எஸ் கொண்டுள்ளது ஏன்?

பதில் – விடுதலைப் புலிகளுடனான போரை தயார்ப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் தலைமைத்துவம் முக்கியமானதாக இருந்தது. கல்வி, பயிற்சி, அவர்கள் விருத்தி செய்திருந்த பாதுகாப்பு என்பவற்றினூடாக இது மேற்கொள்ளப்பட்டது.

அச்சுறுத்தல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அழிக்கப்படும் வரை வேட்டையாடும் மனோபாவத்தை இலங்கைத் தலைவர்கள் கொண்டிருந்தனர். அதனையே நாங்கள் பாதுகாப்பு தொடர்பான மனோ பாவமென குறிப்பிடுகின்றோம்.

முன்னைய அரசாங்கம் பயங்கரவாதிகளை கைது செய்தல் அல்லது கொல்லுதல் மூலமும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களை தீவிரவாதிகளை கைது செய்ததன் மூலமும் அச்சுறுத்தலை இல்லாமல் செய்தது. அதன் பின்னர் கைது செய்தவர்களுக்கு அரசாங்கம் புனர்வாழ்வளித்தது.

தீவிரவாதிகளை அரசாங்கம் கைது செய்யாது இருக்கும் வரை பயங்கரவாதிகளாகிவிடுவர்.

நலிந்த நிலையிலுள்ள முஸ்லிம்களை அடிப்படைவாதத்திற்கு உட்படுத்தல், சமூகங்களுக்கு இடையிலான மத ரீதியான சமாதானத்தை குழப்புதல் என்பனவற்றை ஐ.எஸ்.ஐ.எஸ். திட்டமிட்டு கிழக்கிலங்கையில் கலிபேற் (இஸ்லாமிய அரசு) மாகாணமொன்றை உருவாக்க அது திட்டமிட்டது.

கல்வியினூடாக வழிநடத்தப்பட்டும் தீவிரவாதிகள் கடுமையான சட்டங்களால் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிடில் ஐ.எஸ்.ஐ.எஸ். இலங்கையில் வளர்ச்சியடைந்துவிடும். இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் இன் கேந்திரமாக மேலெழும்.

You might also like