நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல்! யாழ்ப்பாண மக்களை பாராட்டும் இராணுவம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல்! யாழ்ப்பாண மக்களை பாராட்டும் இராணுவம்

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட மக்கள், இன பேதமின்றி பாதுகாப்பு பிரிவினருடன் ஆதரவாக செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக யாழ். மாவட்டத்தில் பிரச்சினைகள் இன்றி பாதுகாக்க முடிந்துள்ளதாக யாழ்ப்பாணத்துக்கான படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த இணக்கப்பாடு மேலும் தொடர்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான நபர் அல்லது செயற்பாடுகள் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு அவர் கூறியுள்ளார்.

உடனடியாக செயற்படுவதற்கு பாதுகாப்பு பிரிவு ஆயத்தமாக உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

You might also like