மாணவன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதுண்டு பெண் ஒருவர் பலி

புல்மோட்டை பிரதான வீதியில் 14 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பதவிய – புல்மோட்டை பிரதான வீதியின் 4ஆம் கட்டடை ருவான்புர பிரதேசத்தில் இந்த விபத்து இன்று நடந்துள்ளது.

விபத்தில் அதே பிரதேசத்தை 80 வயதான பெண்மணியே உயிரிழந்துள்ளார்.

மேலும், மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற மாணவனை பதவிய பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like