மதுபோதையில் வந்த கும்பலினால் தாக்கப்பட்ட ஆசிரியர்கள்

மதுபோதையில் வந்த கும்பலினால் தாக்கப்பட்ட ஆசிரியர்கள்

அடையாளம் தெரியாத கும்பலொன்றினால் தாக்குதலுக்குள்ளான இரண்டு ஆசிரியர்கள் படுகாயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் கல்வி வலயம் மஸ்கெலியா கவரவில ஆரம்ப பிரிவு பாடசாலை ஆசிரியர்களே நேற்று பிற்பகல் இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் குறித்த பாடசாலையை சுற்றி பாதுகாப்பு வேலியமைக்க பாடசாலை நிர்வாகமும் பொற்றோர்களும் தீர்மானம் எடுத்து பாடசலையை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் பொற்றோர்களில் ஒரு குழுவினர் பாதுகாப்பு வேலி அமைக்ககூடாதென அறிவித்துள்ளனர்.

எனினும் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு வேலியை நிர்வாகம் அமைக்க நடவடிக்கை எடுத்திருந்தது, இந் நிலையில் நேற்று பாடசாலை கடமை முடிந்து பேருந்து தரிப்பிடத்திற்கு வருகைத்தந்து கொண்டிருந்தபோது முச்சக்கரவண்டியில் வந்த அடையாளம் தெரியாத கும்பலொன்று ஆசிரியர்களை தாக்கியுள்ளதாக காயமுற்ற ஆசிரியர்களினால் முறைப்பாடு செய்யப்படுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் கூறியுள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்டோர் மது போதையிலிருந்ததாகவும், பாதுகாப்பு வேலி அமைக்க கூடாதென கூறிய பொற்றோர்களினால் அனுப்பப்பட்டவர்களே தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள தாக்குதலுக்குள்ளான ஆசிரியர்கள் இருவரும் மஸ்கெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணை தொடர்வதாகவும் மஸ்கெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You might also like