ஆயுத கிடங்கு கண்டுபிடிப்பு! இலங்கையிலிருந்து அமெரிக்கா சென்று வாழ்ந்து வந்தவர் சிக்கினார்

ஆயுத கிடங்கு கண்டுபிடிப்பு! இலங்கையிலிருந்து அமெரிக்கா சென்று வாழ்ந்து வந்தவர் சிக்கினார்

தனமல்வில பகுதியில் விவசாய பண்ணையருகேயுள்ள ஆயுத கிடங்கொன்றினை குடாஓயா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அரச பத்திரிகையொன்று மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டி இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,

குறித்த ஆயுத கிடங்கிலிருந்து பெருந்தொகையிலான ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளதுடன், விவசாய பண்ணையின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் இலங்கையிலிருந்து அமெரிக்கா சென்று வாழ்ந்து வந்தவராவார். அத்துடன் அமெரிக்க பிரஜாவுரிமையையும் இவர் பெற்றிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

மேற்படி ஆயுத கிடங்கிலிருந்து ஸ்னைப்பர் துப்பாக்கிகள் 2, இயந்திர துப்பாக்கிகள், கை துப்பாக்கிகள் உள்ளிட்ட 8 துப்பாக்கிகள், இரு நவீன ரிவோல்வர்கள், சன்னங்கள் மற்றும் தோட்டாக்கள் உட்பட பெருந்தொகையான உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like