உரிய விதிமுறைகளின் கீழ் மே 18 தினத்தை அனுஷ்டியுங்கள்! இராணுவ தளபதி கோரிக்கை

உரிய விதிமுறைகளின் கீழ் மே 18 தினத்தை அனுஷ்டியுங்கள்! இராணுவ தளபதி கோரிக்கை

தமிழ் மக்களினால் அனுஷ்டிக்கப்படும் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை உரிய விதிமுறைகளின் கீழ் முன்னெடுக்குமாறு இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், மே 18 நினைவு தின நிகழ்விற்கு இராணுவத்தினரால் எந்தவித இடையூறுகளும் விளைவிக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள இராணுவ தளபதி,

“இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கான உரிமை அனைவருக்கும் இருக்கின்றது.

இந்நிலையில், மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை உரிய விதிமுறைகளின் கீழ் முன்னெடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போது அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவசரகால சட்டமும், நினைவு தின அனுஷ்டிப்பும் இருவேறு விடயங்கள் என இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like