இலங்கைக்கு, ஷரியா பல்கலைக்கழகம் தேவையில்லை! ரணில் எடுத்துள்ள முடிவு

இலங்கைக்கு, ஷரியா பல்கலைக்கழகம் தேவையில்லை! ரணில் எடுத்துள்ள முடிவு

இலங்கைக்கு, ஷரியா பல்கலைக்கழகமொன்று தேவையில்லையென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மதரசாக்கள் மற்றும் இஸ்லாமிய கல்வியகங்களை நிர்வகிப்பது தொடர்பில் அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது பேசிய பிரதமர்,

மதரசாக்கள் மற்றும் இஸ்லாமிய கல்வியகங்களை நிர்வகிப்பது தொடர்பான திருத்தச் சட்டமூலத்தை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளன.

இச் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு ஆகியவற்றுடன் தொடர்ந்தும் கலந்துரையாடி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு, ஷரியா பல்கலைக்கழகமொன்று தேவையில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like