வவுனியா செட்டிக்குளத்தில் மாடுகடத்திய நபர் பொலிஸாரால் மடக்கி பிடிப்பு

வவுனியா செட்டிக்குளத்தில் வீடோன்றில் கடந்த  28.02.2017ம் திகதி பட்டியில் கட்டி விடப்பட்ட மாட்டை காணவில்லை என செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடோன்று செய்யப்பட்டது.

இவ் முறைப்பாட்டின் பெயரில் விசாரணைகளை மேற்கொண்ட செட்டிக்குளம் பொலிஸார் நேற்றையதினம் (25.03.2017) 39வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like