சிறைக் கைதியின் இரு ஆசைகளை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரி!

சிறைக் கைதியின் இரு ஆசைகளை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரி!

சிறைக் கைதி ஒருவரின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

லக்மினி இந்திக்க பமுனுசிங்க என்ற சிறை கைதி ஜனாதிபதியிடம் விடுத்த இரண்டு கோரிக்கைக்கு அமைய அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சிறைச்சாலையில் இருந்து லக்மினி இந்திய பமுனுசிங்க சமூக விஞ்ஞான பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். தற்போது களனி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பட்டப்படிப்பை கற்று வருகிறார். 2005ஆம் ஆண்டு இலங்கை குத்துச்சண்டை வீரரான அவர், தேசிய குத்துச்சண்டை போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளார்.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 762 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்காக சிறைச்சாலை வளாகத்திற்கு சென்ற ஜனாதிபதியை சந்தித்த அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

மேலதிக பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கும், குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்வதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்குமாறு குறித்த கைதி ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரது கோரிக்கைக்கு செவி கொடுத்த ஜனாதிபதி அதனை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.

சிறைக்கைதியின் கோரிக்கை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

You might also like