நாள்கணக்கில் நின்று கொண்டே தூங்கும் சிறுமி: விசித்திர நோயால் பாதிப்பு

கேரளாவில் நாள் கணக்கில் தூங்கும் வினோத நோயால் சிறுமி பாதிக்கப்பட்டிருப்பது அவர் பெற்றோருக்கு கவலையை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் லியா, 4 வயதான லியாவுக்கு வினோத நோய் உள்ளது.

அதாவது இவர் நாள் கணக்கில் தொடர்ந்து தூங்கி விடுகிறார். பல சமயம் நின்று கொண்டே கூட தூங்கி விடுகிறார்.

இது குறித்து லியாவின் தாய் லினு டென்னி கூறுகையில், ஒரு முறை லியா தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் தூங்கிவிட்டார்.

பல சமயம் நின்று கொண்டே தூங்குவதும், 12 மணி நேரம் தூங்குவதுமாக அவர் இருக்கிறார்.

லியாவை எழுப்ப அவளது கண்களில் டார்ச் லைட் வெளிச்சத்தை பாய்ச்சி‌யபோதும் விழித்ததில்லை என்ற லினு சோகத்துடன் கூறுகிறார்.

லியாவுக்கு நடந்த சிகிச்சையில் அவருக்கு ரத்தக் கொதிப்பு அதிகமாக இருப்பதும், இதயத்துடிப்பு குறை‌வாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு தான் இந்நோய் வரும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

You might also like