மிக அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை மக்களிடம் அவசர கோரிக்கை

மிக அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை மக்களிடம் கோரிக்கை

நாட்டில் தொடர்ச்சியாக வறட்சியான காலநிலை நீடித்து வந்துள்ள நிலையில் இலங்கை மக்களிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி மின்சாரத்தை வீண் விரயம் செய்வதை தவிர்த்து, மிக அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதன் காரணமாக நீர் மின் உற்பத்தியில் சவாலை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் உரிய அவதானத்துடன் நாட்டு மக்கள் செயற்படுமாயின் மேற்படி சிக்கல் நிலையை சீர் செய்து கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like