இறந்த தாயின் தலையை பிளேடால் சிறு துண்டுகளாக நறுக்கிய மகன்

இறந்த தாயின் தலையை பிளேடால் சிறு துண்டுகளாக நறுக்கிய மகன்

அமெரிக்காவில் இறந்த தாயின் தலையை பிளேடால் சிறு துண்டுகளாக நறுக்கிய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞர், விசித்திரமாக நடந்துகொள்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அங்கு வீட்டை சுத்தம் செய்வதற்காக பயன்படுத்தும் பொருட்கள் வெளியில் வைக்கப்பட்டிருந்துள்ளன.

உள்ளே சென்று பார்த்த போது, படுக்கையறையில் தலையில்லாமல் சாரா வாரன்னர் (65) என்பவரின் சடலம் மட்டும் கிடந்துள்ளது. அதற்கு அருகில் உலோகத்தை வெட்ட பயன்படுத்தும் பிளேடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவருடைய உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், சாரா கொலை செய்யப்பட்டாரா? அல்லது இறந்த அவருடைய உடலை மறைப்பதற்காக அவருடைய மகன் தலையை வெட்டி எடுத்தாரா என்பது தெரியவில்லை.

சாரா இறந்து இரண்டு நாட்களுக்கு பின்னரே தற்போது அவருடைய உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தியும் கூட அவரது தலையைப்பகுதியை கண்டுபிடிக்க முடியவில்லை.

மே 1 ம் திகதி பொலிஸாருக்கு அழைப்பு விடுத்த சாரா, தன்னுடைய மகன் கையில் வெட்டியதாக புகார் கூறியிருந்தார். தற்போது சந்தேகத்தின் பேரில் ஓக்லஹோமா பகுதியில் சாராவின் காரில் சுற்றித்திரிந்த அவருடைய 22 வயது மகன் ஐசக் இஸ்ரேலை கைது செய்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சாராவின் கணவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், தங்களுடைய மகனுக்கு பேய் பிடித்து, மனநோயால் அவதிப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்

You might also like