தர்மச் சக்கரமும் சிலுவை அடையாளமும் பொதித்த 500 வெசாக் கூடுகள்! தீயிட்டு கொழுத்திய சம்பவம்

தர்மச் சக்கரமும் சிலுவை அடையாளமும் பொதித்த 500 வெசாக் கூடுகள்! தீயிட்டு கொழுத்திய சம்பவம்

சாலியவெவ பகுதியில் இளைஞர்கள் குழுவொன்றினால் தயார் செய்யப்பட்ட சுமார் 500 வெசாக் கூடுகள் தீயிட்டு கொழுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெசாக் கூடுகளை சாலியவெவ நகரில் காட்சிப்படுத்த பொலிஸார் தடை விதித்ததன் காரணமாக அவற்றை தீயிட்டு எரித்துள்ளதாக சகோதர தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.

சாலியவெவ நகரிலுள்ள பௌத்த இளைஞர்களும், கிறிஸ்தவ இளைஞர்கள் சிலரும் இணைந்து இந்த வெசாக் கூடுகளை செய்துள்ளனர்.

இவ்வாறு தயார் செய்த வெசாக் கூடுகள் ஒவ்வொன்றினதும், ஒரு பக்கத்தில் பௌத்த தர்மச் சக்கரமும் மறுபக்கத்தில் கிறிஸ்தவ சிலுவை அடையாளமும் பொதித்திருந்துள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு கருவலகஸ்வெவ சாசன மத்திய சபையின் பிரதிப் பதிவாளர் அலுத்கம ஸ்ரீ லும்பினி விகாரையின் விகாராதிபதி மானேவே பஞ்ஞாராம தேரர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்தே இந்த வெசாக் கூடுகளை அகற்ற பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like