கிளிநொச்சியில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மடக்கி பிடிப்பு
கிளிநொச்சி, அக்கராயன் அணைக்கட்டு வீதியில், திருட்டுத்தனமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம், விசேட அதிரடிப் படையினரால் சனிக்கிழமை (25) இரவு மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
அக்கராயன் ஆறு மற்றும் சுபாஸ் குடியிருப்புப் பகுதிகளில் நாள்தோறும் களவாக மணல் ஏற்றி அக்கராயன் அணைக்கட்டு வீதி வழியாக, திருமுறிகண்டி கொண்டு செல்லப்பட்டு, வெளியிடங்களுக்குக் மணல் கொண்டுச் செல்லப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த டிப்பரை அதிரடிப் படையினர் நிறுத்தியபோது, அதனை மதிக்காமல் சென்றதால், வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனையடுத்து, சாரதியை கைதுசெய்யப்பட்டு டிப்பர் வாகனமும் பொலிஸ் நிலையத்துக்குச் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.