பூட்டிய வீட்டில் 4 சடலங்கள்: கொலையா? தற்கொலையா?

கனடா நாட்டில் குடியிருப்பு ஒன்றில் 4 சடலங்களை பொலிசார் கண்டுபிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள ASHCROFT என்ற நகரில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் பொலிசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதில், குடியிருப்பு ஒன்று நீண்ட நாட்களாக பூட்டியுள்ளதாகவும், அதில் குடியிருந்தவர்களையும் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

இத்தகவலை பெற்ற பொலிசார் உடனடியாக குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு சென்றுள்ளனர்.

பின்னர், வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சோதனை செய்தபோது வெவ்வேறு இடங்களில் 4 பேரின் சடலங்கள் கிடந்ததைக் கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எனினும், இதுக் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து எவ்வித ஆதாரங்களும் இதுவரை பொலிசாருக்கு கிடைக்கவில்லை.

அப்பகுதியை சோதனை செய்தபோது பிற பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்பதை பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

மேலும், அடுத்த ஒரு வாரக் காலமாக இப்பகுதியில் விசாரணை நடைபெறும் எனவும், குடியிருப்பை தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பு ஒன்றில் 4 சடலங்கள் கிடந்தது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like