சிறைச்சாலை கைதி வவுனியா வைத்தியசாலையில் மரணம்

வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த சிறைச்சாலை கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 8 ஆம் திகதி வவுனியா பசார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் ஒன்றினை உடைத்து களவாட முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட நபர் 69 வயதான ரட்னாயக்க முதியன் சிலாகே ரம்பன்டா என்ற நபர், கடந்த 12 ஆம் திகதி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அவரது நீதிமன்ற வழக்கு திகதிக்கு அவரால் சமூகம் தர முடியவில்லை. எனவே வழக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருகிறார்.

You might also like