சாம்பிள் மருந்துகளை விற்பனை செய்து பணமீட்டிய மருந்துக் களஞ்சியசாலைக்கு அபராதம்

மருந்துப் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களினால் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக வழங்கப்படும் சாம்பிள் (மாதிரி) மருந்துப் பொருட்களை விற்பனை செய்த நிறுவனமொன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கண்டி, கட்டுகஸ்தோட்டை, மடவளை பிரதேசத்தில் இயங்கி வந்த மருந்துக் களஞ்சியசாலை ஒன்றை மருந்து தரகட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது மருந்து உற்பத்தி நிறுவனங்கள் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக மருத்துவர்களிடம் வழங்கும் சாம்பிள் மருந்துகளின் லேபிள்களை சாமர்த்தியமாக மாற்றி விற்பனை செய்வதில் குறித்த மருந்துக் களஞ்சியசாலை நிர்வாகம் ஈடுபட்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏமாற்றி விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆறு லட்சம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இங்கிருந்து புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு பயன்படுத்தும் விலை உயர்ந்த மருந்துப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மருந்துக்களஞ்சியசாலைக்கு அபராதம் விதிக்கப்பட்டு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

You might also like