முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2017

அக்கினிச்சிறகுகள் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும்; முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வடகிழக்கு இணைந்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2017 தொடர்பான விளக்கமளிக்கும் ஊடக கலந்துரையாடல் நேற்று (26.03.2017) பிற்பகல் 1.00 மணியளவில் வவுனியாவிலுள்ள விருந்தினர் விடுதியில் அக்கினிச்சிறகுகள் அமைப்பின் தலைவர் தலைமையில் இடம்பெற்றது.

யுத்தத்தின் பின்னர் சிதைவடைந்துள்ள மக்களின் வாழ்வாதரத்தினைக்கட்டியெழுப்பும் நோக்கில் அக்கினிச்சிறகுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இளைஞர்களை துர்நடத்தையிலிருந்த மீட்டெடுத்தல் சமூக ஜக்கியத்தினூடாக பொறுப்புணர்வை ஏற்படுத்தி ஒன்றினைவை ஏற்படுத்தல் இளைஞர் வழங்களை சரியாகப்பயன்படுத்தல் முள்ளிவாய்க்கால் விளையாட்டின் நோக்கம் விளையாட்டுக் காலச்சாரம் இறந்தவர்களை நினைவுகூரல் என்பது எமது ஜனநாயக உரிமை என்பதால் அதனடிப்படையில் விளையாட்டின் ஊடாக அனுஷ்டித்தல் வடகிழக்கு இணைந்த தாயக அணி ஒன்றினை உருவாக்குதல் அக்கினிச்சிறகுகள் அமைப்பின் ஒரு செயற்பாடகவும் அமைந்துள்ளது.

அதேசமயம் உழைக்கும் விளையாடும் அணி ஒன்றை உருவாக்குதல் தமிழ் பேசும் தாயக அணியை உருவாக்குவதன் நோக்கமாக இவ் ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அதன் தலைவர் திரு. ஆனந்தரட்ணன் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரு சிறந்த அணியை உருவாக்குதல் ஆசிய நாடுகளில் பங்குபற்றக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்கிக்கொடுப்பது வீரர்களை வெளி உலகத்திற்குக் கொண்டுவருதல் தொடரான வாய்ப்புக்களை நாங்கள் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும். இவ்வாறு கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர் நிமலதாசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னரே தயார் படுத்தியிருந்தோம் அதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்பட்டுள்ளது. கடந்த வருடம் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதவியுடன் உதைபந்தாட்டப்போட்டியை வெற்றிகரமாக நடாத்தியிருந்தோம்.

இம்முறை வடகிழக்கு இணைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டக் கிண்ணத்தை நடாத்த உள்ளோம். வடகிழக்கு இணைந்த ஒரு உறவுப்பாலமாகவும் சமூகங்களுக்கிடையே ஒரு புரிந்துணர்வுடனும் அன்றைய தினம் மக்களுடைய துண்பகரமாக நிகழ்வாக இருந்தாலும் விளையாட்டினுடாக நினைவு படுத்தும் நோக்கிலும் ஒவ்வொரு விளையாட்டு நிகழ்வின்போதும் அவர்களின் அஞ்சலி நிகழ்வினைச் செலுத்தியே வருகின்றோம்.

இதைகளியாட்ட நிகழ்வாக நாங்கள் ஒருபோதும் மாற்ற மாட்டோம் அதற்கு இடம்கொடுக்கவும் மாட்டோம். கடந்த காலங்களில் பல படுகொலைகள் தினத்தில் அவர்களின் நினைவாக விளையாட்டுக்கள் நடாத்தப்பட்டதையும் தெரியப்படுத்தியுள்ளனர். இது ஒரு புதிய விடயமல்ல என்ற கருத்தினை இன்றைய ஊடக சந்திப்பில் முன்வைக்கப்பட்டதுடன்  18ஆம் திகதி அனைத்தக்கழகங்களுடன் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்துவதற்கும் மறுநாள் 19ஆம் திகதி வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக்கேடயத்தினை வழங்கிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இறுதியில் அறிவிக்கப்பட்டது.

You might also like