அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 200 உத்தியோகத்தர்கள் திடீர் இடமாற்றம்!

அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த 200 உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்பய்படவுள்ளனர்.

எதிர்வரும் 1ம் திகதி தொடக்கம் இந்த இடமாற்ற உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவின் கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறிய உத்தியோகத்தர்கள் 200 பேர் இவ்வாறு இடமாற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் மேலும் 100 உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.

அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவில் தற்போது சுமார் 1300 உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இடமாற்றம் செய்யப்படுவோரில் சிலர் 25 ஆண்டுகள் வரையில் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இடமாற்றத்தின் பின்னர் இளைய திறமையான உத்தியோகத்தர்கள் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

You might also like