கிளிநொச்சியில் 36ஆவது நாளாக தொடரும் போராட்டம்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 36 ஆவது நாளாகவும் தொடர்கிறது.
குறித்த போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டம் கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், இன்று வரையில் தீர்வின்றிய நிலையில் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.