அடிப்படை வசதியின்றி தவிக்கும் பெரியதம்பனை கிராம மக்கள்

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பெரியதம்பனைக் கிராமத்தின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட போக்குவரத்து சீரின்மையால் குறித்த கிராமத்தில் உள்ள மக்கள் அவலப்படுகின்றனர்.

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயர்பிரிவிற்குட்பட்ட பெரியதம்பனைக் கிராமத்தில் யுத்தத்தின் பின்னரான கடந்த (01.07.2010) மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டு மக்கள் மீள்குடியேறினர்

ஒருசில மாதங்களின் பின்னர் வீட்டுத்திட்டம் வழங்குவதற்காக காணி இல்லாதவர்களுக்கு மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் வவுனியா மாவட்ட வெங்கலச்செட்டிகுளம் உதவி அரசாங்க அதிபரினால் 1/2 ஏக்கர் காணிகள் வீதம் வழங்கப்பட்டு வீட்டுத்திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.

கிராம மக்களால் ஏழு வீட்டுத்திட்மென அழைக்ப்படும் அப்பகுதியில் உள்ள இரு வீதிகள் தற்போது வரைக்கும் புனர்நிர்மானம் செய்து கொடுக்கப்படவில்லை நடு வீதியில் வெட்டப்பட்ட கட்டைகளும் மரங்களும் அகற்றப்படாமல் உள்ளது.

மழைக்காலங்களில் அந்த பகுதிக்குள் வசிக்கும் மக்கள் போக்குவரத்துச் செய்யமுடியாத நிலையில் உள்ளனர்.

வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச்சபையினர் அபிவிருத்தி செய்ய வேண்டிய வீதிகளாக உள்ளது.

பெரியதம்பனை மக்களால் இந்த செய்தி வெங்கச்செட்டிகுளம் பிரதேச சபையின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது.

You might also like