கிளிநொச்சியின் கழிவகற்றல் முகாமைத்துவத்தின் அலட்சியப்போக்கு

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபையின் கீழுள்ள கழிவகற்றல் முகாமைத்துவம் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி நகரின் பல இடங்களிலும் திண்மக் கழிவுகள் உரிய முறையில் அகற்றப்படுவதில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு கிளிநொச்சி கழிவகற்றல் முகாமைத்துவம் உரிய முறையில் தமது பணிகளை முன்னெடுக்காத காரணத்தினால் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நகரின் மையப்பகுதில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கழிவுப்பொருட்கள் குவிக்கப்பட்டு காணப்படுகின்றன.

இதனால் பொதுமக்களும் வர்த்தகர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like