கனடாவில் வேலை பெற்றுத்தருவதாக கூறி இலங்கை பெண் செய்த மோசடி

கனடாவில் வேலை பெற்றுத்தருவதாக கூறி இலங்கை பெண் செய்த மோசடி

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகளால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர், ஏகல – குரொலையின் பாக் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அவர் பொரளையில் சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி சென்றுள்ளார்.

அவரது அலுவலகத்தில் இருந்து கனடாவிற்கு வேலைக்கு அனுப்புவதற்கு தேவையான உடன்படிக்கைகள் மற்றும் விண்ணப்பப்படிவங்களும் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அந்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த பெண், வேறு ஒருவரின் கீழ் பணிபுரிகின்றமையும் தெரியவந்துள்ளது.

இதன்படி பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சந்கே நபரான பெண் அடுத்த மாதம் 7ம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.

You might also like