காதல் விவகாரத்தால் 19 வயதுடைய இளைஞன் படுகொலை

காதல் விவகாரம் காரணமாக 19 வயதுடைய இளைஞனை படுகொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பு – வத்தளை பிரதேசத்தில் நேற்று மாலை குறித்த இளைஞரை சிலர் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த 19 வயதுடைய இளைஞன், கண்டி, நித்தவெலையை பிறப்பிடமாக கொண்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தின் போது இளைஞன் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் காதல் விவகாரமே இக் கொலைக்கு காரணம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like