இன்றைய ராசிபலன் 30.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன் 30.05.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்:

உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். உறவினர்களின் வருகையால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

ரிஷபம்:

வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும். தாயின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்குத் தாய்மாமனின் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்:

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். எதிர்பாராத பொருள் வரவுக்கு இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் லேசான தலைவலி ஏற்படக்கூடும்.

கடகம்:

தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தி கிடைக்கும். சிலருக்கு திடீர்ப் பயணங்களால் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

சிம்மம்:

உற்சாகமான நாளாக இருக்கும். தாய் வழி உறவுகளால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மாலையில் உறவினர்களுடன் பேசி மகிழும் வாய்ப்பு உண்டாகும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மை உண்டாகும்.

கன்னி:

இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தி தரும். அடுத்தவர் விஷயத்தில் கருத்து சொல்ல வேண்டாம். குடும்பத்தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழிலில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். நண்பரின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்:

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். முயற்சிகளில் வெற்றியும் பணலாபமும் கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகப் பணியின் காரணமாக சிலருக்கு தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ள நேரும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்:

பணவரவு மகிழ்ச்சி தரும். புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

தனுசு:

இன்றைக்கு வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். தாயின் அன்பும் ஆதரவும் சோர்ந்த மனதுக்கு உற்சாகம் தருவதாக அமையும். சிலருக்கு மாலையில் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

மகரம்:

மகர ராசிக்கு இன்றைய ராசி பலன் படி இன்று காரிய தடை தாமதம் ஏற்படலாம். உங்கள் செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் வருமானம் சராசரி அளவில் இருக்கும். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

கும்பம்:

உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். மாலை நேரத்தில் நீண்டநாள்களாக சந்திக்காத நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

மீனம்:

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனைக்கு அங்கீகாரம் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தியைக் கேட்பீர்கள். மாலையில் எதிர்பாராத நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் நன்மை உண்டாகும்.

You might also like