ஆறாவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

கிளிநொச்சியில் காணி உரிமம் கோரி அப்பகுதி மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் ஆறாவது நாளாகவும் தொடர்கிறது.

தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம், அடிப்படை வசதிகள் மற்றும் நிரந்தர வீட்டுத் திட்டம் என்பன இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம். இனியும் அவ்வாறே வாழ முடியாது. தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் என வலியுறுத்தி போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர்.

 

You might also like