திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை தனியாக அழைத்துச் சென்று இளம் பெண் செய்த செயல்!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை தனியாக அழைத்துச் சென்று இளம் பெண் செய்த செயல்!

தமிழகத்தில் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையை தனியாக அழைத்துச் சென்று காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய முயற்சித்த பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கொல்லனூரை சேர்ந்தவர் சரவணன் (27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவஎருக்கும், உறவினரான சென்னப்ப நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகள் ஜான்சி (19)-க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு ஜான்சியை பார்ப்பதற்காக சரவணன் சென்னப்ப நாயக்கனூருக்கு சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் ஜான்சி அவரது பெற்றோர் இருந்துள்ளனர். வீட்டிற்கு வந்த சரவணனுக்கு ஜான்சி லெமன் ஜூஸ் கொடுத்துள்ளார்.

அதன் பின் சரவணனிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் சிறிது நேரம் கழித்து ஜான்சி விட்டிற்குள் வர, சரவணன் இரத்தக் காயங்களுடன் சாலையோரம் கிடந்துள்ளார்.

இதைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பின் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர், அதைத் தொடர்ந்து ஜான்சியிடமும் விசாரித்துள்ளனர்.

அப்போது, நான் வாட்ஸ்அப் பயன்படுத்திய போது திருச்சியை சேர்ந்த கார்த்திக் என்பவர் அறிமுகமானார். அதனால் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் எங்களுக்குள் காதலாக மாறியது.

இதனால் நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். இந்த விசயம் எங்கள் குடும்பத்திற்கு தெரியாது.

அதனால் நான் எனக்கு நிச்சயம் செய்த சரவணணை கொலை செய்ய முடிவு செய்தேன். அதனால் சரவணனை எனது வீட்டின் அருகே அழைத்து அவருக்கு ஜூஸ்சில் மயக்க மருந்து கொடுத்தேன்.

அப்போது அவர் சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் எனது காதலன் கார்த்திக் மற்றும் அவரது நண்பர் ஆகிய 3 பேரும் சேர்ந்து சரவணனை தாக்கினோம். பின்னர் அவரை முட்புதரில் தூக்கி வீசி விட்டு சென்று விட்டோம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ஜான்சியை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

You might also like