நாட்டிலுள்ள மாணவர்கள் தொடர்பில் வெளிவந்துள்ள முக்கிய தகவல் -பெற்றோரே கவனியுங்கள்!

நாட்டிலுள்ள மாணவர்கள் தொடர்பில் வெளிவந்துள்ள முக்கிய தகவல் -பெற்றோரே கவனியுங்கள்!

நாட்டில் பாடசாலை மாணவர்களுள் 80 சதவீதமானோர் சமபோஷாக்கு நிறைந்த உணவை உட்கொள்வதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சின் வைத்திய ஆய்வு நிறுவனத்தின் போஷாக்கு விஷேட வைத்தியர் திருமதி.ரேணுகா ஜெயதீஸ்ஸ தெரிவித்துள்ளார். இது இந்த பிள்ளைகளின் வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது.

பாடசாலைகளில் தரம் 5 மாணவர்களில் 7 சதவீத மாணவர்களும் தரம் 10இல் 10 சதவீத மாணவர்களும் இந்த நிலைமைக்கு உள்ளாகும் நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுள் 30 சதவீதமானோர் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

சிறுபராயத்தில் இருந்தே சம போஷாக்குடன் உணவை வழங்குவது மூலம் பிள்ளைகளை தொற்றா நோயிலிருந்து பாதுகாக்க முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலைக்கு மாணவர்கள் வரும் பொழுது அவர்களுக்கு தேவையான உணவை கொண்டுவருமாறு வலியுறுத்தப்படுகின்றனர். ஆனால் போஷாக்கற்ற உணவுகளையே கொண்டு வருகின்றனர். இதனால் சிறுவர்களின் உடல் எடை அதிகரிக்கின்றது.

3/1 பகுதியினர் இரும்புச்சத்து குறைபாடுகள் இருப்பதாக நாம் கண்டறிந்துள்ளோம். இதற்கு காரணம் இரும்புச் சத்து செறிந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளாமையே காரணம் .

வளரும் பருவத்தில் இவ்வாறான உணவுவகை மிகவும் முக்கியமானதாகும். பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு உணவை வழங்கும் பொழுது கூடுதலான கவனம் செலுத்தவேண்டும்.

நமது நாட்டில் உணவில் சோற்றை பெருமளவில் உட்கொள்வதை நாம் காணமுடிகிறது. சோற்றுடன் புரோட்டின் சத்துள்ள உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமாகும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அது மாத்திரமன்றி நாளாந்தம் பிள்ளைகளை விளையாட்டுக்களில் ஈடுபடுத்துவது மிகவும் முக்கியமானதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

You might also like