பலாலி குண்டு வெடிப்பின் எதிரோலி! வவுனியா நகரசபைக்கு பூட்டு

பலாலி குண்டு வெடிப்பின் எதிரோலி! வவுனியா நகரசபைக்கு பூட்டு

யாழ்ப்பாணம் பலாலியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக இன்று (01) வவுனியா நகரசபை மைதானம் மாலை 7.00 மணியுடன் மூடப்பட்டது.

வவுனியா நகரசபைமைதானமானது பொது மக்கள் மற்றும் விழையாட்டு வீரர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய மைதானமாக திகழ்ந்து வருவதுடன், மாவட்ட மட்டம், தேசிய மட்டத்தில் விளையாடும் விளையாட்டு வீரர்கள் பயிற்சிபெறும் முக்கிய மைதானமாக நகரசபை மைதானம் விளங்குவதுடன் தூர இடங்களிலிருந்து வரும் விளையாட்டு வீரர்கள் இம் மைதானத்தில் இரவு 9.00 மணிவரையும் பயிற்சி செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நகரசபை மைதானம் மூடப்பட்டதானால் உடல் வலுவுட்டல் நிலையத்தில் பயிற்சியில் ஈடுபட்டவர்கள், உதைபந்தாட்டப் பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை தவிசாளரிடம் தொடர்புகொள்ள எடுக்கப்பட்ட முயற்சி பலனளிக்கவில்லை.

You might also like