இன்றைய ராசிபலன் 02.06.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன் 02.06.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்:

எதிர்பாராத பணவரவு கிடைக்கும். புதிய ஆடைகள் அணிந்து மகிழ்வீர்கள். புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

ரிஷபம்:

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மிதுனம்:

சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடப்பதில் தாமதம் ஏற்படும். எந்த ஒரு பணியையும் பொறுமையுடன் செய்வது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடுவதையும், வெளியூர்ப் பயணங்களையும் தவிர்க்கவும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும், எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

கடகம்:

வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு உதவி செய்வார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும்.

சிம்மம்:

இன்று உங்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அவரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

கன்னி:

கணவன் – மனைவி இடையில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படக்கூடும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளியில் செல்லும்போது எடுத்துச்செல்லும் பொருள்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

துலாம்:

தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர் வருகையும், அவர்கள் மூலம் சுபச் செய்தியும் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

விருச்சிகம்:

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். மாலையில் நீண்ட காலமாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அவர்களால் சில ஆதாயங்களும் ஏற்படக்கூடும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புராதனமான கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.

தனுசு:

தாயின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது நல்லது. சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

மகரம்:

புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்:

உற்சாகமான நாளாக அமையும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீனம்:

அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். அவர்களால் பெருமை ஏற்படும். ஆனால், பிற்பகலுக்குமேல் உங்கள் காரியங்களில் சில தடை தாமதங்கள் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு.

You might also like