வெளிச்சம் அறக்கட்டளையின் நன்கொடையாளர் கௌரவிப்பு நிகழ்வும் 1ம் ஆண்டு பூர்த்தியும்

வெளிச்சம் அறக்கட்டளையின் நெடும் பயணத்தில் பங்குகொண்டிருந்த மற்றும் பங்குகொண்டிருக்கும் அன்பளிப்பாளர்கள், பயனாளிகள் மற்றும் ஆர்வலர்களை கெளரவிக்கும் நிகழ்வு தலைவர் பா. லம்போதரன் தலைமையில் 26.03.2017 அன்று இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்திகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சுகாதார அமைச்சர் கௌரவ Dr ப.சத்தியலிங்கம் அவர்கள் பங்குகொண்டிருந்தார் மேலும் சிறப்பு விருந்தினர்களாக திரு இராதாகிருஸ்ணன் (தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர்), திரு S.S வாசன் (வவுனியா மாவட்ட சமூகசேவைகள் திணைக்கள அதிகாரி), திரு சி.வில்வராசா (இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க செயலாளர்) போன்றோரும் கௌரவ விருந்தினர்களாக திரு சு.அமிர்தலிங்கம் (வ/ விபுலாநந்தாக் கல்லூரி அதிபர்), திருமதி S.நந்தசேன (வ/ கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலய அதிபர்) மற்றும் வெளிச்சம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்

இந்திகழ்வில் நன்கொடையாளர்களுக்கு வெளிச்சம் அறக்கட்டளையின் மிக உயரிய கௌரவத்தை வெளிப்படுத்தும் முகமாக ஞாபகச் சின்னங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர் மேலும் பல பாடசாலை மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ள கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

You might also like