வவுனியாவின் கிராமமொன்றில் இரவானதும் நிலவும் மயான அமைதி; கடும் கலக்கத்தில் மக்கள்!

வவுனியாவின் கிராமமொன்றில் இரவானதும் நிலவும் மயான அமைதி; கடும் கலக்கத்தில் மக்கள்!

வவுனியா வேலங்குலம் கிராமத்தில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் மிகுந்த அச்சத்துடன் இரவுப் பொழுதைக் கழிக்கவேண்டியுள்ளதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, நேற்றைய தினமும் குறித்த கிராமத்தில் விவசாயக் காணி ஒன்றுக்குள் புகுந்த யானை 6 தென்னைகளையும் சுமர் 25 வாழை மரங்களையும் முற்றாக சேதமாகியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

அத்துடன் சிறிய மாமரம் மற்றும் பூசணி என்பவற்றையும் மிதித்து நாசமாகி உள்ளது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் தினமும் யானைகளின் தாக்கம் காணப்படுவதுடன் இரவானதும் மக்கள் வெளியே நடமாடமுடியாமல் மயான அமைதி நிலவுவதுடன், தமது உயிருக்கும் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like