மாமியாரின் மொபைல் எண்ணை ஆபாச தளத்தில் பதிவேற்றம் செய்த மருமகன்!

மாமியாரின் மொபைல் எண்ணை ஆபாச தளத்தில் பதிவேற்றம் செய்த மருமகன்!

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் குடும்ப தகராற்றில் மாமியாரின் மொபைல் எண்ணை ஆபாச தளத்தில் பதிவேற்றம் செய்த மருமகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள என்.டி.பி.சி நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றும் 33 வயதான நபரை, சைபர் கிரைம் பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.

மாமியாரின் மொபைல் எண்ணை, ஆபாச தளத்தில் பதிவேற்றம் செய்ததாக அவர் கைது செய்யப்படுள்ளார்.

கைதான நபருக்கு 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. மனைவி மற்றும் மாமியாருடன் அவருக்கு குடும்ப விவகாரங்களில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும், தனக்கு போதிய மரியாதை தரவில்லை என்று ஆத்திரமடைந்த அவர், மாமியாரின் மொபைல் எண்ணை ஆபாச தளம் ஒன்றில் பதிவிட்டுள்ளார்.

இதன் காரணமாக, கைதான நபரின் 59 வயது மாமியாருக்கு அடிக்கடி அழைப்புகள் வந்துள்ளது. அப்போது, எதிர்புறம் இருந்தவர்கள் ஆபாசமாக பேசியுள்ளனர். மேலும், அடிக்கடி போன் செய்து தொல்லை செய்துள்ளனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், சைபர் கிரைம் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், பெண்ணின் மருமகன் தான் ஆபாச தளத்தில் மொபைல் எண்ணை பதிவு செய்துள்ளார் என்பதை கண்டறிந்தனர்.

இதனை அடுத்து, அவரை கைது செய்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

You might also like