வவுனியாவில் நீதி கேட்டு வீதியில் இறங்கிய இளைஞர்கள் : சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்

வவுனியாவில் நீதி கேட்டு வீதியில் இறங்கிய இளைஞர்கள் : சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்

வவுனியா தவசிகுளம் பிள்ளையார் வீதியில் இன்று (03.06.2019) காலை நீதி கேட்டு வீதியில் இறங்கிய இளைஞர்களினால் அவ்விடத்தில் சற்று பதட்டமாக நிலை காணப்பட்டது.

வடமாகாண முதலமைச்சரினால் ஒதுக்கப்பட்ட இரண்டு கோடியே இருபது லட்சம் ரூபா (2,200000) நிதியோதுக்கிட்டில் தவசிகுளம் பிள்ளையார் வீதி செப்பனிடும் பணி கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பக்கப்பட்டது.

சுமார் 1.5 கிலோ மீற்றர் கல்லிட்டு தாரிடும் பணிகள் நிறைவுக்கு வந்த நிலையில் எஞ்சிய கற்களை வீதி நேற்றையதினம் (02.06.2019) இரவு ஒப்பந்தக்காரர் 11 டிப்பர் மூலம்  வவுனியா மதவு வைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள கல் ஆலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இதனையடுத்து நேற்றையதினம் இரவு அவ்விடத்தில் ஒன்று கூடிய தவசிகுளம் கிராமத்தினை சேர்ந்த இளைஞர்கள்  மதவு வைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள கல் ஆலைக்கு சென்று அவற்றை மீள எடுத்த இடத்திற்கு  எடுத்துச்செல்லுமாறு கோரி கல் ஆலையினை முற்றுகையிட்டமையினால் 11 டிப்பர்கள் மூலம் மீள கற்கள் தவசிகுளத்திற்கு எடுத்து வரப்பட்டது.

இச் சம்பவம் நேற்றையதினம் இரவுடன் முடிவுக்கு வந்த நிலையில் இன்று (03.06.2019) காலை வீதியினை செப்பனிடும் பணிகளை பார்வையிட வந்த ஒப்பந்தகாரர்களை தவசிகுளம் இளைஞர்கள் முற்றுகையிட்டு பொலிஸாருக்கு (119) தகவல் வழங்கினார்கள்

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர் கார்த்திகேசன் நத்தகுமாரன் அங்கிருந்த இளைஞர்களுடனும் ஒப்பந்தகாரர்களிடமும் கலந்துரையாடியதுடன் வவுனியா தெற்கு பிரதேச சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தரை  வரவழைத்து வீதியில் தரத்தினை மதிப்பிடு செய்யுமாறு பணிப்புரை பிறப்பித்தார்.

சிறிது நேரத்தின் பின்னர் அவ்விடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.

ஊடகங்களுக்கு இளைஞர்கள் கருத்து தெரிவிக்கையில்,

எமது வீதியினை செப்பனிடுவதற்கேன எமது கிராமத்தில் குவிக்கப்பட்ட கற்கள் எவ்வாறு மிஞ்சும் ஒரு டிப்பர் கற்கள் மிஞ்சினால் பரவாயில்லை 11 டிப்பர் கற்கள் மிகுதியாகவுள்ளது என்றால் எமது வீதி எந்த தரத்தில் போடப்பட்டுள்ளது என தெரியவில்லை

எனவே மிகுதியுள்ள கற்களை எமது வீதிக்கே பயன்படுத்த வேண்டும் அத்துடன் இவ் வீதியில் போடப்பட்டுள்ள தாரினை கையால் கழற்ற முடிகின்றது. வீதி செப்பனிடும் பணியில் ஊழல் இடம்பெற்றுள்ளது. எனவே இவ் விடயத்தில் உரிய அதிகாரிகள் தலையிட்டு தீர்வினை பெற்றுத்தருமாறு தெரிவித்தனர்.

You might also like