தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை… கண்ணீர் விட்ட மணப்பெண்! அதன் பின் நடந்த சம்பவம்

தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளை… கண்ணீர் விட்ட மணப்பெண்! அதன் பின் நடந்த சம்பவம்

இந்தியாவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால், மணப் பெண் வீட்டார் மாப்பிள்ளையின் உறவினர்களை பிணையக்கைதி போன்று பிடித்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் காயா மாவட்டத்தில் இருக்கும் தானே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை துலா முகேஷ் குமார் என்பவருக்கு திருமணம் நடைபெறவிருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் தட புடலாக சென்று கொண்டிருந்தது. அப்போது திருமண சடங்கிற்கு தயாராவதற்காக அறையின் உள்ளே சென்ற மாப்பிள்ளை வெகு நேரமாக வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்து அவரின் கதவை திறந்து பார்த்த போது, அவர் நண்பர்களுடன் தப்பியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த தகவல் மணப் பெண்ணுக்கு தெரியவர, இதனால் வேதனையில் அழுதுள்ளார்.

அதன் பின் இந்த விவரம் அங்கிருந்த உறவினர்களுக்கு தெரியவர, மாப்பிள்ளையை பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் கிடைக்காத காரணத்தினால், மணப் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோரை பிடித்து வைத்து, தாங்கள் வரதட்சனையாக கொடுத்த பணத்தை கொடுக்கும் படி கேட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் அப்பகுதிக்கு விரைந்து அவர்களை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் பெண் வீட்டார் கற்களை வீசி பொலிசாரை அண்ட விடாமல் தடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பிடித்து வைத்திருந்த 30- பேரையும் அவர்கள் தனியாக 10 வாகனம் ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர். இந்த விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்க உடனடியாக கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் சிலரும் அங்கு விரைந்துள்ளனர்.

இதையடுத்து இறுதியாக மாப்பிள்ளை குடும்பத்தினர் வரதட்சனை கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர். அதன் படி அவர்கள் சுமார் 1.5 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளதாகவும், முழுத் தொகை கிடைக்கும் வரை கார் ஒன்றை பிடித்து வைத்துள்ளதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like