ரிசாட், அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா மீது முறைப்பாடு செய்ய முடியும்! விசேட பொலிஸ் குழு

ரிசாட், அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா மீது முறைப்பாடு செய்ய முடியும்! விசேட பொலிஸ் குழு

முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் ஆகியோர் நேற்றைய தினம் தங்களது பதவிகளில் இருந்து விலகியிருந்த நிலையில் அவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதற்காக பொலிஸ் தலைமையகத்தில் மூன்று பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 12ஆம் திகதி வரை இவ்வாறு தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like