நெருங்கி வருகிறது மரணதண்டனை; 11ஆம் நாள் முதற்கட்ட நகர்வு; யார் அந்த இருவர்?

நெருங்கி வருகிறது மரணதண்டனை; 11ஆம் நாள் முதற்கட்ட நகர்வு; யார் அந்த இருவர்?

இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்றும் அலுக்கோசு பதவிக்காக தெரிவு செய்யப்படவுள்ளவர்களுக்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தால் இரண்டு நாள் செயன்முறைப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த பயிற்சிகள் எதிர்வரும் 11, 12 ஆம் திகதிகளில் நடத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இம்முறை அலுக்கோசு பதவிகளுக்காக விண்னப்பித்தவர்களில் 26 பேரை நேர்முகப் பரீட்சையின்மூலம் தேர்வுசெய்துள்ளதாகவும் செயன்முறைப் பயிற்சியின் பின்னர் இறுதியாக இருவரை தெரிவுசெய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த நாற்பது ஆண்டுகளாக மரண தண்டனை நிறைவேற்றப்படாத நிலையில் மரண தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பொதைப் பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக மீண்டும் மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரச தலைவர் தீர்மானித்திருந்தார்.

இதனடிப்படையிலேயே குறித்த தண்டனையினை நிறைவேற்றும் பதவிகளுக்கு இருவர் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

You might also like