மது அருந்திய தந்தை மர்மமான முறையில் எரிக்காயங்களுடன் சடலமாக மீட்பு

நண்பருடன் சேர்ந்து மது அருந்திய வயோதிபர் ஒருவர் மர்மமான முறையில் எரிக்காயங்களுடன் சடமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் ஊவா, பரணகம, மஸ்பென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மஸ்பென்ன பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 67 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபருடன் சேர்ந்து நேற்றிரவு மது அருந்திய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரை வெலிமடை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வெலிமடை அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

You might also like