நீதிமன்றில் பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்த சந்தேகநபர்! பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு

நீதிமன்றில் பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்த சந்தேகநபர்! பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய சம்பவம் இன்று மாலை நடைபெற்றது.

பொலிசாரால் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று குறித்த நபர் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.இதன்போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

இந்நிலையில் குறித்தநபர் நீதிமன்றத்தில் இருந்து பொலிசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டுதப்பிஒடியுள்ளார்.

இதனைஅடுத்து குறித்த சந்தேகநபரை பொலிசார் தேடி வருகின்றனர்.மேலும்தப்பி ஓடிய நபரை கைது செய்ய திறந்த பிடியாணை உத்தரவை நீதவான்பிறப்பித்துள்ளார்.

You might also like