தென்னிலங்கையில் பயங்கரவாதி சஹ்ரானின் செயற்பாடு! விசாரணையில் பல தகவல்கள் அம்பலம்

தென்னிலங்கையில் பயங்கரவாதி சஹ்ரானின் செயற்பாடு! விசாரணையில் பல தகவல்கள் அம்பலம்

ஹம்பாந்தோட்டையில் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்ற முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை, சிப்பிகுளம் பிரதேசத்தில் இந்த முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மற்றும் காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரான் குழுவுடன் தொடர்புடையவர்கள் வழங்கிய தகவல்களுக்கமைய இந்த முகாம் கண்டுபிக்கப்பட்டுள்ளது.

வீடு ஒன்றில் பயிற்சி முகாம் நடத்தி செல்லப்பட்ட செல்லப்பட்டுள்ளதாகவும், அந்த வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தங்காலை பிரிவுக்கு பொறுப்பான விசேட பொலிஸ் பிரிவு அதிகாரி லக்சிறி கீதால் தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் ஊடாக பயிற்சி பெற்ற அனைத்து பயிற்சி முகாம் மற்றும் முகாம்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பயிற்சி முகாமை நடத்தி செல்லப்பட்ட வீட்டின் உரிமையாளர் குவைத்தில் தொழில் செய்து வருபவர் என தெரியவந்துள்ளது.

பொறுப்பாளர், உரிமையாளருக்கு அறிவிக்காமல் ஹம்பாந்தோட்டைக்கு வரும் முஸ்லிம் சுற்றுலா பயணிகளுக்கு அந்த வீட்டில் தங்க ஏற்பாடு செய்துள்ளார்.

சஹ்ரான் அந்த வீட்டினை 2018ஆம் ஆண்டில் இருந்து 4 தடவைகள் பயங்கரவாத குழுவினருக்கு பயிற்சி வழங்க பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஒரு முறைக்கு 15000 ரூபாய் பணம் செலுத்தியுள்ளார். 24 மணித்தியாலங்கள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு முறையும் 15 பேர் கொண்ட குழுவினர் பயற்சி பெற்றுள்ளதாகவும், அந்த 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பயிற்சி பெற்றவர் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like