பத்து பேரிடம் ஆசை வார்த்தை கூறி செய்த செயல்.. மோசடி ராணியாக வலம் வந்த பெண்… அதிரவைக்கும் பின்னணி

பத்து பேரிடம் ஆசை வார்த்தை கூறி செய்த செயல்.. மோசடி ராணியாக வலம் வந்த பெண்… அதிரவைக்கும் பின்னணி

தமிழகத்தில் தம்பதி விஷம் குடித்ததில் மனைவி பரிதாபமாக இறந்த நிலையில், இது தொடர்பாக அவர்களிடம் பணமோசடியில் ஈடுபட்ட மகளிர் சுய உதவிக்குழு தலைவியை பொலிசார் தேடி வருகின்றனர்.

திருச்சியை சேர்ந்தவர்பூங்கொடி. மகளிர் சுய உதவி குழு தலைவியான இவரது குழுவில் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் உறுப்பினராக இருந்தார்.

பூங்கொடி, தான் தலைவியாக இருக்கும் குழுவில் லட்சுமி பெயரில், ஒரு லட்சம் ரூபாய் பணம் கடனாக பெற்றுள்ளார்.

2 மாதங்கள் அதிக வட்டி கொடுத்ததோடு, வாரம் கட்ட வேண்டிய தொகையையும் முறையாக கொடுத்து ஆசை காட்டியதால் ஏமாந்து போன லட்சுமி, மேலும் 2 மகளிர் சுய உதவி குழுக்களில் உறுப்பினராக சேர்ந்து அங்கும் கடன் பெற்று பூங்கொடிக்கு பணம் கொடுத்துள்ளார்.

லட்சுமியிடம் 3 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்ட பூங்கொடி, திடீரென முறையாக பணம் செலுத்துவதை நிறுத்தியுள்ளார். அடுத்த வாரம், அடுத்த மாதம் என காலம் தாழ்த்தியதால் லட்சுமியால் கடன் பெற்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு முறையாக பணம் செலுத்த இயலவில்லை என்று கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், பணம் வாங்கிய குழுக்களில் இருந்து கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதால், பணத்தை திருப்பி செலுத்த இயலாமல் தவித்த லட்சுமி, தனது கணவர் பாஸ்கருடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார். கணவர் பாஸ்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே லட்சுமி விஷம் அருந்திய தகவல் அறிந்த மகளிர் சுய உதவி குழு தலைவி பூங்கொடி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகின்றது.

லட்சுமி போல 10 பேர் பெயரில் 10 லட்சம் ரூபாய் அளவிற்கு கடன் பெற்று பூங்கொடி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, மோசடியில் ஈடுபட்டு லட்சுமியின் உயிரிழப்புக்கு காரணமான பூங்கொடியை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே லட்சுமியின் சடலத்தை பெற்றுக் கொள்வோம் என்று தெரிவித்த அவரது உறவினர்கள், உடலை வாங்க மறுத்து தர்ணாப் போராட்டம் நடத்தினர்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் மோசடி பெண் பூங்கொடியை தேடி வருகிறார்கள்.

You might also like