நாட்டில் தொடரும் கடும் வரட்சி! யாழ்ப்பாணத்தில் ஒருலட்சம் பேர் பாதிப்பு

நாட்டில் தொடரும் கடும் வரட்சி காரணமாக சுமார் பத்து லட்சம் அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நாட்டின் 14 மாவட்டங்களில் வாழும் பொதுமக்களுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கடும் வரட்சியின் காரணமாக பல இடங்களில் குடிநீருக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பவுசர் கொள்கலன்களில் குடிநீரை விநியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 255, 616 குடும்பங்களைச் சேர்ந்த 940, 222 பேர் வரட்சியான காலநிலை காரணமாக பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டம் நாட்டின் ஏனைய மாவட்டங்களை விட கூடுதலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளதுடன் , மாவட்டத்தில் வாழும் பொதுமக்களில் ஒரு லட்சம் வரையானோர் வரட்சியின் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like