பக்கத்து வீட்டு நாயை கொன்று சமைத்து சாப்பிட்ட நபர்! அதிர்ச்சி சம்பவம்
கேரளாவில் பக்கத்து வீட்டில் இருக்கும் நாயை கொன்று சமைத்து சாப்பிட்ட நபரின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ஹரிகுமார். இவர் ஒன்றரை வயதில் டாபர்மேன் வகை நாயை வளர்த்து வருகிறார்.
ஹரிகுமாரின் பக்கத்து வீட்டில் கட்டிட வேலை நடந்து வருகிறது. இதனால் இங்கு பல வட மாநில தொழிலாளர்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் விக்ரம் (24) என்னும் கட்டிட தொழிலாளி ஹரிகுமாரின் நாயை திருடி சென்று அதை கொன்று சமைத்து சாப்பிட்டுள்ளார்.
இதை பார்த்த வேறொரு தொழிலாளி இது குறித்து ஹரிகுமாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் விக்ரமை பிடித்து ஹரிகுமாரிடம் ஒப்படைக்க முயன்றுள்ளார்.
அப்போது விக்ரம் அவரை கத்தியால் குத்தியுள்ளார்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்ததும் பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து விக்ரமை கைது செய்தனர்.
விக்ரம் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல இருப்பதால் அவர் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.