வவுனியாவில் காட்டு யானைத்தாக்குதலுக்கு இலக்காகி நான்கு வீடுகள் சேதம்

வவுனியா, கள்ளிக்குளத்தில் நேற்று (26) இரவு காட்டு யானையின் தாக்குதல் காரணமாக நான்கு வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா, கள்ளிக்குளம் கிராமத்தில் நேற்று இரவு புகுந்த யானைகள் அங்கு தற்காலிக வீடுகள் அமைத்து தங்கி வாழ்ந்த மக்களின் வீடுகளை தாக்கியதில் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளது.

மேலும் யானையில் தாக்குதலுக்கு பயந்து ஓடிய இளைஞன் ஒருவரே கிணற்றினுள் விழுந்து காயமடைந்துள்ளார்.

இதேவேளை, அப்பகுதியில் மக்கள் வளர்த்து வந்த பயன்தரும் மரங்களையும் யானைகள் சேதப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like