கனகராயன்குளம் ஏ9 வீதியில் வாகனம் ஒன்று தீயில் எரிந்து நாசம்

கனகராயன்குளம் ஏ9 வீதியில் வாகனம் ஒன்று தீயில் எரிந்து நாசம்

வவுனியா, கனகராயன்குளம் ஏ9 வீதியில் பயணித்த சொகுசு வாகனம் ஒன்று தீடிரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது.

இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஜீப் ரக சொகுசு வாகனம் ஒன்று ஏ9 கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் பயணித்த போது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனையடுத்து அதில் பயணித்த சாரதியும் மற்றுமொருவரும் வாகனத்தில் இருந்து இறங்கி ஓடியுள்ளனர்.

தொடர்ந்தும் வாகனம் முழுமையாக தீயில் எரிந்த நிலையில் அப்பகுதியில் வசித்தவர்களின் துணையுடன் தீயை அணைக்க முயன்ற போதும் அது பயனளிக்காது வாகனம் முழுமையாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த வாகனமானது அரசாங்கத்திற்கு சொந்தமானது என தெரியவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

You might also like