கொடுமையான முறையில் மேற்கொள்ளப்பட்ட கொலை! தீவிர நடவடிக்கையில் குதித்துள்ள பொலிஸார்!

கொடுமையான முறையில் மேற்கொள்ளப்பட்ட கொலை! தீவிர நடவடிக்கையில் குதித்துள்ள பொலிஸார்!

திவுலபிட்டிய – தெல்வகுர பகுதி வீடொன்றில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் கை கால்கள் கட்டப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் தெல்வகுர பகுதியை சேர்ந்த 77 வயதான வயோதிபப் பெண் என பொலிஸார் தெரிவித்தள்ளனர். குறித்த பெண் அந்த வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை தேடி திவுலபிட்டிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

You might also like