மாத்தறையில் இடம்பெற்ற கோர விபத்து! 17 பேர் காயம்

மாத்தறையில் இடம்பெற்ற கோர விபத்து! 17 பேர் காயம்

மாத்தறை – அக்குரஸ்ஸ பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பேருந்து ஒன்று மற்றுமொரு பேருந்தினை முந்திச்செல்ல முற்பட்ட போதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விபத்துடன் தொடர்புடைய இரண்டு பேருந்துகளின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like