வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்! மீறினால் மிகப்பெரிய தொகை

வாகன சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்! மீறினால் மிகப்பெரிய தொகை

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கான அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையின் வேக எல்லை மணிக்கு 100 கிலோ மீற்றராகும். அந்த வேகம் 120 கிலோ மீற்றராக அதிகரித்தால் 3000 – 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அமைச்சர் குறப்பிட்டுள்ளார்.

மேலும் வேகம் 120 – 130 கிலோ மீற்றராக அதிகரித்தால் அபராத பணம் 5000 – 10000 ரூபாய் வரை அதிகரிப்படவுள்ளது.

130 – 150 கிலோ மீற்றர் வரை வேகம் அதிகரித்தால் 10000 – 25000 ரூபாய் வரை அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like